தனுசு ராசியினருக்கான வார பலன்கள் @ மே 16 - 22 


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், குரு - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து வருவது அவசியம். திருமண வயதில் உள்ள தனுசு ராசி அன்பர்களுக்கான வரன் தேடும் முயற்சி தடைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இவ்வாரம் சற்று கவனமாக இருந்து வருவது நல்லது.

தாங்கள் செய்த சிறு தவறை கூட சக ஊழியர்கள் பெரிதுபடுத்தி காட்டுவார்கள். அது மேலிடத்தில் தங்கள் மீதுள்ள நல்ல அபிப்பிராயத்தை பாதிக்கக்கூடும்.தொழிலில் முன்னேற்றம் எதையும் இந்த வாரத்தில் எதிர்பார்க்க முடியாது. சற்று பொறுமையாக இருந்து வரவும் மற்றபடி தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தொடரவும்.

குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களிடமோ அல்லது குடும்ப நண்பர்களிடமும் கோபப்பட்டு பேசி வீண் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். வேலை காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காகவோ கணவன்-மனைவி இவ்வாரம் பிரிந்திருக்க நேரிடும்.

மாணவமணிகள் விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தருணத்தில் தங்கள் மனதினை முழுவதுமாக கல்வியில் செலுத்துவது அவசியம். பெண்கள் கடின உழைப்பு ஏற்படக்கூடும்.

பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வாருங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், வெள்ளி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.

x