மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.13, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப்.13, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: மனதில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.

ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வரும்.

மிதுனம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும்.

கடகம்: குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

கன்னி: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு.

தனுசு: உறவினர், நண்பர்களுடன் கருத்துமோதல் வந்து நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் கிட்டும்.

மகரம்: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும்.

மீனம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை முடித்துக் காட்டுவீர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x