மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.12, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப்.12, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: முக்கிய பிரமுகர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்வீர்.

ரிஷபம்: சில காரியங்களை முடிப்பதில் தடை ஏற்படும். பணவரவு உண்டு.

மிதுனம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும்.

கடகம்: அதிகார பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். முன்கோபத்தை குறைப்பீர்.

சிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர்.

கன்னி: பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

துலாம்: உறவினர், நண்பர்களின் ஆதரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்.

தனுசு: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர். பழைய கடன், பகையை நினைத்து பயம் வரும்.

மகரம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்.

மீனம்: பேசாமல் இருந்த உறவினர், நண்பர்கள் வலிய வந்து பேசுவர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x