மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.5, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப். 05, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு.

ரிஷபம்: குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கடகம்: உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். வழக்கில் வெற்றி உண்டு.

சிம்மம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். நல்ல வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும்.

கன்னி: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை.

துலாம்: மன இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

விருச்சிகம்: திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்புகிட்டும்.

மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர்.

கும்பம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம்.

மீனம்: வேலைகளை உடனே முடிக்க நினைப்பீர்கள். பழைய கடன் பிரச்சினை கவலை அளிக்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x