மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.2, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப். 02, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: மனதில் இருந்த அச்சம் நீங்கி தைரியம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

ரிஷபம்: நீங்கள் விரும்பிய புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள்.

மிதுனம்: புதியவர்கள் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும்.

கடகம்: பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களுடன் அறிமுகம் உண்டாகும்.

சிம்மம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.

கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பெற்றோர் உடல்நிலை சீராகும்.

துலாம்: வெகு நாட்களாக மனதில் இருந்த பிரச்சினைக்கு முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு.

விருச்சிகம்: எதார்த்தமான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவு பெருகும்.

தனுசு: பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

மகரம்: பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.

கும்பம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x