மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.31, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.31, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்.

ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்.

மிதுனம்: மனைவிக்கு புது ஆடை, ஆபரணங்களை வாங்கி கொடுப்பீர்.

கடகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம்.

சிம்மம்: சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிட்டும்.

கன்னி: வீட்டில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

துலாம்: வெளிவட்டாரத்தில், மதிப்பு, மரியாதை உயரும். நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவர்.

விருச்சிகம்: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள்.

தனுசு: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகுங்கள். கணவன் மனைவிக்குள் மனக்கசப்புகள் வரக்கூடும்.

மகரம்: வியாபாரம் சூடு பிடிக்கும். பாக்கி வசூலாகும். தாயாரின் மருத்துவச் செலவு குறையும்.

கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்: பழைய பொன்,பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x