மிதுனம் ராசியினருக்கான வார பலன்கள் @ மே 16 - 22


மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்பத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்குமா என்றால் சந்தேகம் தான். வீண் செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு இல்லை. உத்தியோகஸ்தர்களைப் பொறுத்த வரை வேலைக்கு விண்ணப்பித்து இதுவரை தகவல் வரவில்லையே என மனம் வருந்தி வந்தவர்க்கு நற்செய்தி காத்துள்ளது. தற்போது பணியில் இருந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு ஒன்று இந்த வாரத்தில் கிடைக்க சிறந்த வாய்ப்பு உள்ளது.

தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது மனநிறைவைத் தரும். பண பரிமாற்றம் செய்ய வேண்டி இருந்தால் வாரத்தின் பிற்பகுதியில் செய்யவும். வியாபாரம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவீர்கள். அதற்காக கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம் அது கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். புதிய வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பின் அதற்கான முயற்சிகளை இவ்வாரம் மேற்கொள்ளலாம். அதில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் அவசரப்படவேண்டாம். எதையும் சற்று தீர ஆராய்ந்து பார்த்து பின்பு முடிவு எடுக்கவும்.

கணவன் மனைவியிடையே அன்னியோனியம் குறைந்து காணப்படும். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள். பெருமாளுக்கு துளசி அணிவியுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.

x