மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.28, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.28, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும்.

ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்.

மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாய் வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும்.

கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்களெல்லாம் இனி ஓடி வந்து பேசுவார்கள்.

கன்னி: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும்.

துலாம்: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். தாய்வழி உறவினர் மத்தியில் கவுரவம் கூடும்.

விருச்சிகம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவ பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கும்பம்: சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள்.

மீனம்: இழுபறி வேலைகளை முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் இல்ல விசேஷங்களில் பங்கேற்பீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

x