ரிஷபம் ராசியினருக்கான வார பலன்கள் @ மே 16 - 22


ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூரியன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: ரிஷப ராசி அன்பர்களே! இந்தவாரம் குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். இருப்பினும் செலவுகள் இவ்வாரம் சற்று அதிகரித்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படும். தற்போது கல்லூரி படிப்பை முடித்து உள்ளவர்கள் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே வேலை கிடைக்கும்.

நேரத்திற்கு உணவருந்த முடியாமல் கூட போகலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.

குடும்பத்தில் குழந்தைகள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு நீங்கள் செலவு செய்யவேண்டியிருக்கும். உறவினர்களுக்கும் அல்லது நண்பர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால் அவற்றை முன்நின்று தீர்த்து வைப்பீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து ஒற்றுமை ஏற்படக்கூடும்.

நீதிமன்றத்தில் தங்கள் மீது வழக்குகள் ஏதாவது இருப்பின் அது இப்போது தங்களுக்கு சாதகமாக மாறும். கல்லூரி படிப்பை முடித்து இருக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கு பொறுமை மிகவும் அவசியம்.

பரிகாரம்: சிவபெருமானை தினமும் வலம் வரவும். கோளறு பதிகம் படியுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.

x