மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.27, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.27, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்: வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத் தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும்.

கடகம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

கன்னி: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் வியாபாரத்தில் இருந்த தொல்லைகள் நீங்கும்.

துலாம்: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

விருச்சிகம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும். வெளி வட்டாரத்தில் நிதானம் தேவை.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கும்பம்: முகத்தில் தெரிந்த சோகம் மறையும். வாகனத்தை மாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர்.

மீனம்: எடுத்த வேலையை முடிக்க போராடுவீர். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைத்து அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

x