மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.26, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.26, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: நியாயமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும்.

ரிஷபம்: பெரியவர்கள், அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையை பெற்று செயல்படுங்கள்.

மிதுனம்: நீண்டநாள் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

கடகம்: நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

சிம்மம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

கன்னி: ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும்.

துலாம்: திடீர் பயணம், அலைச்சல், அசதி, டென்ஷன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். உற்சாகம் அதிகரிக்கும்.

தனுசு: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உடல்நலம் சீராகும்.

மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x