மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.24, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.24, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர். தடைகள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பீர்.

மிதுனம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும்.

கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

சிம்மம்: குடும்பத்தார் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். தாயார், பிள்ளைகளின் உடல்நிலை சீராகும்.

கன்னி: குடும்பத்தினருடன் விட்டு கொடுத்து போகவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

துலாம்: பேசாமல் இருந்த நண்பர்கள் வலிய வந்து பேசுவர். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.

விருச்சிகம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும்.

தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள்.

மகரம்: குழப்பம் நீங்கி முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள்.

கும்பம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீனம்: முகப் பொலிவு கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நண்பர்கள் உதவுவர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x