மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.23, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.23, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது அவசியம்.

கடகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும்.

சிம்மம்: தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி விலகும்.

கன்னி: எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர் களின் பேச்சுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

துலாம்: புது கருத்துகளால் சுற்றி இருப்பவர்களை வசீகரிப்பீர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.

தனுசு: புதிய பொறுப்பும், பதவியும் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும்.

மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும்.

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

மீனம்: முன்கோபத்தை குறைத்து இங்கிதமாக பேச வேண்டும். அலைச்சல் அதிகரிக்கும். தம்பதிக்குள் விட்டு கொடுத்து போகவும்

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x