மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.22, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.22, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

ரிஷபம்: நவீன மின் சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவு எடுப்பீர். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர்.

கடகம்: அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு.

சிம்மம்: தம்பதிக்குள் வீண் விவாதங்கள் வர வாய்ப்பு உள்ளது. அமைதி காக்கவும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம்,வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர். செலவை குறைத்து சேமிப்பீர்கள்.

விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

மகரம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைக்கும்.

மீனம்: அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் செலவுகளை கட்டுப்படுத்தவும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x