மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.21, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.21, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று நட்பை புதுப்பிப்பீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசவும்.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்: நெடுநாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வரும்.

கடகம்: நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும்.

சிம்மம்: வீண் வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்க வேண்டாம். கடன் பிரச்சினை அதிகமாகும்.

கன்னி: குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்: தம்பதிக்குள் இருந்த பனிப்போர் விலகும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்.

விருச்சிகம்: உங்களிடம் நட்புடன் இருந்தபடியே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்.

தனுசு: நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர்.

மகரம்: புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். நண்பர், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்.

கும்பம்: எடுத்த வேலையை போராடி முடிப்பீர்கள். மனைவிவழியில் விட்டுக் கொடுத்து போகவும்.

மீனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு இருக்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x