மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.20, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.20, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கல்லூரி நண்பர்கள் தேடி வந்து பேசுவர்.

ரிஷபம்: இங்கிதமாக பேசி எல்லோரையும் கவருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர்.

மிதுனம்: மயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். அவசரத்துக்கு வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள்.

கடகம்: உறவினர்கள் வகையில் விரயச் செலவுகள் வரக் கூடும். பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்டாதீர்.

சிம்மம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர்.

கன்னி: தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

துலாம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் முக்கிய முடிவு எடுப்பீர்.

விருச்சிகம்: புது புது யோசனைகளை தந்து உங்களைச் சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். பாதியில் நின்ற வேலை முடியும்.

தனுசு: தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார்.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். புது ஆடை ஆபரணங்களில் மனம் லயிக்கும்.

கும்பம்: திட்டமிட்ட சில வேலைகளை போராடி முடிப்பீர். குடும்பத்தில் சிறு சிறு கருத்து மோதல்கள் வரக் கூடும்.

மீனம்: அடிமனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர். வாகனச் செலவு குறையும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x