மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.19, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.19, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பேச்சில் பொறுமை தேவை.

மிதுனம்: கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். தள்ளிப்போன காரியங்கள் முடியும். தொழிலில் போட்டி குறையும்.

கடகம்: தொழில், வியாபாரத்தில் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள்.

சிம்மம்: புதியவர்களின் நட்பு கிடைக்கும். புதியவர்கள் அறிமுகத்தால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி: எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அதிகார பதவியில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

விருச்சிகம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் சுமுக நிலை காணப்படும்.

தனுசு: வீண் அச்சம், கவலை, சஞ்சலம் ஓயும். சமயோசித பேச்சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள்.

மகரம்: குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தோன்றி மறையும். திடீர் பயணத்தால் அலைச்சல், செலவு ஏற்படும்.

கும்பம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகள் நீங்கும். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் ஏற்படும்.

மீனம்: உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. தடைகள் உடைபடும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x