நடிகைக்கு பணம்: டொனால்டு ட்ரம்புக்கு தண்டனை இல்லை

By KU BUREAU

வாஷிங்டன்: கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்​தலில் குடியரசு கட்சி சார்​பில் டொனால்டு ட்ரம்ப் போட்​டி​யிட்​டார். அப்போது ட்ரம்​புடனான ரகசிய தொடர்பு குறித்து ஆபாச நடிகை ஸ்டார்மி ஊடகங்​களுக்கு பேட்​டியளித்​தார். இதை ட்ரம்ப் மறுத்​தார்.

இந்த விவகாரத்தை மூடி மறைக்க ட்ரம்ப் தனது வழக்​கறிஞர் மைக்​கேல் கோஹன் மூலம் ரூ.1.07 கோடியை ஸ்டார்​மிக்கு கொடுத்​தார். இந்த தொகை ட்ரம்​பின் தேர்தல் வரவு-செலவு கணக்​கில் சட்டரீ​தியிலான செலவு என்று பதிவு செய்​யப்​பட்​டது. அமெரிக்​கா​வில் வணிக செலவை பொய்யாக காட்டுவது சட்ட​விரோதம் ஆகும். இதுதொடர்பாக மன்ஹாட்டன் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுக்கப்​பட்​டது. இந்த வழக்​கில் நீதிபதி ஜுன் மெர்சன் நேற்று தீர்ப்​பினை வழங்​கினார். “நடிகைக்கு பணம் கொடுத்த வழக்​கில் ட்ரம்ப் குற்​றவாளி​தான்.

எனினும் அதிபராக தேர்வு செய்​யப்​பட்​டுள்ள அவருக்கு அபராதமோ, சிறை தண்டனையோ விதிக்​கப்​பட​வில்லை” என்று நீதிபதி தீர்ப்​பளித்​தார். வரும் 20-ல் பு​திய அ​திபராக ட்​ரம்ப் ப​தவி​யேற்க உள்​ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE