இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க வங்கதேச நீதிமன்றம் மறுப்பு

By KU BUREAU

டாக்கா: வங்கதேசத்​தில் இடைக்கால அரசு பொறுப்​பேற்ற பிறகு இந்துக்​களுக்கு எதிரான தாக்​குதல்களை கண்டித்து வங்கதேச இஸ்கான் அமைப்பு தலைமை​யில் தொடர் போராட்​டங்​கள், பேரணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலை​யில் இந்த அமைப்​பின் முன்​னாள் தலைவர் சின்​மோய் கிருஷ்ண தாஸ் கடந்த திங்​கட்​கிழமை தேசதுரோக வழக்​கில் கைது செய்​யப்​பட்​டார். இது, இந்துக்கள் மத்தி​யில் கொந்​தளிப்பை ஏற்படுத்​தி​யது. கைது நடவடிக்கைக்கு எதிராக சிட்​ட​காங் நீதி​மன்ற வளாகத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை நடந்த போராட்​டத்​தில் சைபுல் இஸ்லாம் அலி என்ற வழக்​கறிஞர் கொல்​லப்​பட்டார்.

இந்த வன்முறையை தொடர்ந்து வங்கதேசத்​தில் இஸ்கான் அமைப்​புக்கு தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்​டும் என டாக்கா உயர் நீதி​மன்ற அமர்வு முன் வழக்​கறிஞர் ஒருவர் நேற்று முன்​தினம் முறை​யிட்​டார். இதையடுத்து இஸ்கான் அமைப்​பின் சமீபத்திய செயல்​பாடுகள் தொடர்பாக அரசு எடுத்​துள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்​கு​மாறு அட்டர்னி ஜெனரலுக்கு நீதிப​திகள் உத்தர​விட்​டனர்.

இந்த வழக்கு நீதிப​திகள் ஃபரா மகபூப், தேபாசிஷ் ராய் சவுத்ரி அமர்​வு ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்​தில் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. மேலும் இஸ்கான் செயல்​பாடுகள் மற்றும் வழக்​கறிஞர் சைபுல் இஸ்லாம் கொலை தொடர்பாக 3 வழக்​குகள் பதிவு செய்​யப்​பட்​டுள்ள​தாக​வும் இந்த வழக்​கு​களில் இதுவரை 33 பேர் கைது செய்​யப்​ பட்​டுள்ள​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து வங்கதேசத்​தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்​ப​தி​லும் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாது​காப்​ப​தில் அரசு கவனமுடன் செயல்பட வேண்​டும் என்று தெரி​வித்த நீதிப​திகள் இஸ்கான் அமைப்​புக்கு தடை விதிக்க வேண்​டும் என்ற கோரிக்கையை நிராகரித்​தனர்.

மம்தா பானர்ஜி கவலை: வங்கதேசத்​தின் தற்போதைய நிலவரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கவலை தெரி​வித்​தார். இதுகுறித்து மாநில சட்டப்​பேர​வை​யில் அவர் கூறும்​போது, “வங்​கதேசம் வேறு நாடு. இந்த விவகாரத்தை மத்திய அரசு கவனத்​தில்​ கொள்​ளும். இது எங்கள் அதிகார வரம்​பிற்​குள் வ​ராது. நாங்​கள் அது பற்றி பேசவோ, தலை​யிடவோ கூடாது. நாங்​கள் உள்​ளுக்​குள் வருந்​தினாலும், மத்​திய அரசின் ​கொள்​கைகளை பின்​பற்​றுகிறோம்​” என்​றார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE