இஸ்ரேல் – லெபனான் இடையே 2 மாதம் போர் நிறுத்தம்: இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவேற்பு

By KU BUREAU

புதுடெல்லி: இஸ்​ரேல்–லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இந்த ஒப்பந்​தத்​தை இந்தியா வரவேற்றுள்ளது.

பாலஸ்​தீனத்​தின் காசா பகுதி​யில் செயல்​பட்டு வரும் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இஸ்ரேலுக்​கும் கடந்த ஆண்டு அக்டோபரில் போர் ஏற்பட்​டது. இதில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்​புல்லா அமைப்பு தாக்​குதல் நடத்​தி​யது. இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் இதுவரை சுமார் 3,750 பேர் உயிரிழந்தனர். இரு நாடு​களி​லும் ஆயிரக்​கணக்கானோர் இடம் பெயர்ந்​துள்ளனர். இந்நிலை​யில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடு​களின் மத்தி​யஸ்த முயற்​சி​யால் இஸ்ரேலுக்​கும் ஹிஸ்​புல்லா அமைப்​புக்​கும் இடையே 2 மாத போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்​டுள்​ளது.

இதன்படி தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்​புல்லா தனது ஆயுத குழுக்களை விலக்​கிக் கொள்​ளும். இதுபோல் இஸ்ரேலும் அங்கிருந்து தனது படைகளை திரும்பப் பெறும். தெற்கு லெபனானில் அந்நாட்டு ராணுவ வீரர்​களும் ஐ.நா. அமைதிப் படையினரும் நிறுத்​தப்​படு​வார்கள். அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு போர் நிறுத்த நடைமுறைகளை கண்காணிக்​கும். ஒப்பந்தத்தை ஹிஸ்​புல்லா மீறினால் தாக்​குதல் நடத்​தும் உரிமை தங்களுக்கு உள்ளதாக இஸ்ரேல் கூறி​யுள்​ளது.

இந்நிலை​யில் இந்த போர் நிறுத்த உடன்​பாட்டை இந்தியா வரவேற்றுள்ளது.இதுகுறித்து வெளி​யுறவு அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள செய்திக்​குறிப்​பில், “பதற்​றத்தை தணிக்​க​வும், கட்டுப்​பாட்டுடன் நடந்து கொள்ள​வும் பேச்சு​வார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்ப​வும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம். இந்த முன்னேற்​றம், இந்த பரந்த பிராந்​தி​யத்​தில் அமைதி மற்றும் ஸ்​திரத்​தன்​மைக்கு வழி​வகுக்​கும்​ என்​று நாங்​கள்​ நம்​பு​கிறோம்​” என்​று கூறப்​பட்​டுள்​ளது. இந்த ஒப்பந்தம் காசாவில் நடந்து வரும் மோதலை உள்ளடக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE