இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1,440 பழங்கால பொருட்களை ஒப்படைத்தது அமெரிக்கா

By KU BUREAU

நியூயார்க்: அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்ட தலைமை வழக்கறிஞர் ஆல்வின் எல்.பிராக் வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கடத்தல்காரர்கள் சுபாஷ் கபூர் மற்றும் நான்சி வீனர் உள்ளிட்ட கடத்தல் கும்பலிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மீட்கப்பட்ட இந்தியாவுக்கு சொந்தமான ரூ.84 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகள் உட்பட 1,440 பழங்கால கலை பொருட்கள் அந்த நாட்டிடம் ஒப்படைக்கப் பட்டன. மன்ஹாட்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய துணைத் தூதர் மணிஷ் குல்ஹரி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு (நியூயார்க் கலாச்சார சொத்து, பழங்கால பொருட்கள் கடத்தல் தடுப்பு) பிரிவின் குழுகண்காணிப்பாளர் அலெக்சாண்ட்ரா டிஅர்மாஸ் முன்னிலையில் இந்த பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட கலாச்சார பாரம்பரியமிக்க பொருட்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் இருந்து கடத்தப்பட்ட ஒரு தெய்வீக நடனக் கலைஞரை சித்தரிக்கும் மணற்கல் சிற்பம், ராஜஸ்தான் மாநிலம் தனிசரா -மகாதேவா கிராமத்திலிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பச்சை- சாம்பல் நிற பாறையில் செதுக்கப்பட்ட தனேசர் தாய் தெய்வம் உள்ளிட்டவை ஒப்படைக்கப்பட்ட கலை பொருட்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE