அமெரிக்காவை தாக்கிய மில்டன் சூறாவளி: 20 இலட்சம் மக்கள் இருளில் தவிப்பு!

By KU BUREAU

மில்டன் சூறாவளி அமெரிக்காவை கடுமையாக தாக்கிய நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதியருகே மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்த நிலையில், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

புளோரிடா பகுதிகளில் சூறாவளி தாக்கியதில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர். சூறாவளியால் அந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணியிலும் பாதிப்பு ஏற்பட கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில், சமீபத்தில் ஹெலன் சூறாவளி தாக்கியதில் 6 மாகாணங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டில் கத்ரீனா சூறாவளி தாக்கியதில் 1,400 பேர் வரை உயிரிழந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE