புரத ஆராய்ச்சி பணிகள்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

By KU BUREAU

சென்னை: 2024ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி,பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 7ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளில் மருத்துவத் துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்டு மற்றும் கனடாவின் ஜெஃப்ரீ ஹின்டன்ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு இன்று வௌியானது. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக டேவிட் பேக்கருக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், புரத கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய இருவருக்கும் ஒரு பாதியும் வழங்கப்படுகிறது. தங்க பதக்கத்துடன் கூடிய ரூ.8.39 கோடி பரிசு தொகையை உள்ளடக்கிய நோபல் விருதுகள், விருதை நிறுவிய ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE