ஈரான் vs இஸ்ரேல் - ராணுவத்தில் அதிக சக்தி வாய்ந்தது எது?

By KU BUREAU

டெல்அவிவ்: பாலஸ்தீனத்தின் காசாவை அடுத்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஈரான் சமீபத்தில் 200 சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசியது. இதனால் இஸ்ரேலில் ஒரு கோடி பேர், கவச அறைகளுக்கு சென்று பதுங்கும் சூழல் ஏற்பட்டது.

ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரானுக்கு சரியான பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் மீண்டும் தாக்குவோம் என ஈரான் கூறியுள்ளது. இதனால் மேற்கு ஆசிய பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருநாட்டு ராணுவத்தின் வலிமையை நாம் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஆள் பலம் என பார்த்தால் ஈரானில் 4 கோடியே 90,000 பேர் உள்ளனர். இவர்களில் ராணுவத்துக்கு தகுதியானவர்கள் 4 கோடியே 10 லட்சம் பேர் . இஸ்ரேலில் 38 லட்சம் பேர்உள்ளனர், இவர்களில் ராணுவத்தில் பணியாற்றதகுதியானவர்கள் 32 லட்சம். போர் பயிற்சி பெற்றவர்கள் ஈரானில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரும், இஸ்ரேலில் 4 லட்சத்து 65 ஆயிரம் பேரும் உள்ளனர்.

போர் விமானங்களை கணக்கெடுத்தால், ஈரானிடம் 186 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் இஸ்ரேலிடம் 241 போர் விமானங்கள் உள்ளன. ஈரானிடம் 129 ஹெலிகாப்டர்களும், 2,000 டேங்க்குகளும், 65,000 கவச வாகனங்களும் உள்ளன. இஸ்ரேலிடம் 146 ஹெலிகாப்டர்களும், 1,300 டேங்க்குகளும், 40,000 கவச வாகனங்களும் உள்ளன.

கடற்படை பலத்தை ஒப்பிட்டால் ஈரானிடம் 7 போர்க்கப்பல்களும், 19 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. இஸ்ரேலிடம்போர்க்கப்பல்கள் இல்லை, 5 நீர்மூழ்கி கப்பல்களை மட்டுமே வைத்துள்ளது. ஆள் பலம்,ஆயுத பலத்தில் வேறுபாடுகள் இருந்தாலும்,போரில் பின்பற்றப்படும் வியூகங்கள், நவீனதொழில்நுட்பங்கள் ஆகியவைதான் இந்தப் போரில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE