கொல்கத்தாவில் வங்கதேச எம்.பி. கொலை... இருநாடுகளிலும் பரபரப்பு - நடந்தது என்ன?

By வீரமணி சுந்தரசோழன்

கொல்கத்தா வந்திருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஆளும் அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசிம் கொல்லப்பட்டதாக வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் அறிவித்துள்ளார்.

மே 12-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு வந்த அன்வருல் அசிம், கடந்த மே 13-ம் தேதி மதியம் கொல்கத்தா அருகே பிதான்நகரில் உள்ள வீட்டுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக நண்பர்களுடன் சென்றுள்ளார். மே 13 ஆம் தேதிக்குப் பின்னர் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. எனவே கொல்கத்தாவில் உள்ள அவரது குடும்ப நண்பர் கோபால் விஸ்வாஸ் பிதான்நகரில் உள்ள பாராநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

அன்வருல் அசிம்

இந்த சூழலில் இன்று வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான், “எம்.பி. அன்வருல் அசிம் அனார் கொல்கத்தாவில் கொல்லப்பட்டார், மேலும் இது தொடர்பாக மூவர் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று அவர் அறிவித்தார். இதனை தொடர்ந்து வங்கதேச எம்.பி.யின் கொலை தொடர்பாக இந்திய அதிகாரிகள் கூட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அசிமின் குடும்ப உறுப்பினர்களும் சம்பிரதாயங்களுக்காக கொல்கத்தா வரவுள்ளனர், அவர்களது விசா நடைமுறைகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேசிய டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையத்தின் அமைச்சர் ஷபான் மஹ்மூத், “எங்கள் உள்துறை அமைச்சர் அறிவித்தபடி, அசிம் கொல்லப்பட்டுள்ளார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், இந்திய அரசிடம் இருந்து எங்களிடம் இன்னும் உண்மையான தகவல்கள் இல்லை. எனவே, நாம் காத்திருக்க வேண்டும். ஆனால், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று எங்கள் உள்துறை அமைச்சர் ஏற்கெனவே அறிவித்திருப்பதால், அதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

அன்வருல் அசிம்

இதுகுறித்து பேசிய கொல்லப்பட்ட எம்.பியின் மகள், “இதுபற்றி எங்களிடம் தெளிவான தகவல் இல்லை. அவர் கொல்கத்தாவுக்கு அடிக்கடி பயணிப்பவர், கொல்கத்தாவில் உள்ளவர்களுடன் நல்ல உறவை வைத்திருந்தார். அவருக்கு மிக நெருங்கிய நண்பர் கோபால் விஸ்வாஸ் இருக்கிறார். ஒருவேளை, அவர் சிகிச்சைக்காகவோ அல்லது வியாபாரத்திற்காகவோ இங்கு வந்திருக்கலாம். வேறு எந்த பிரச்சினை எதைபற்றியும் எங்களுக்கு தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.

அன்வரும் அசிம் கொலை செய்யப்பட்டு கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் அவரது உடலை வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தேடுதல் நடவடிக்கைகளின் போது, போலீஸார் நியூடவுனில் உள்ள ஒரு குடியிருப்பில் இரத்தக் கறைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE