‘ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வளங்களை கொள்ளையடிக்கும் பாகிஸ்தான்' - இந்தியா கடும் கண்டனம்

By எஸ்.சுமன்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக, இந்தியா அதிகாரபூர்வமாக கருத்தும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் நடந்து வரும் தீவிரமான போராட்டங்கள் தொடர்பாக இந்தியா இன்றைய தினம் கருத்து தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான வளங்களை கொள்ளையடிக்கும் பாகிஸ்தான் கொள்கையின் இயற்கையான விளைவு என்று அப்பகுதியில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது பாகிஸ்தானின் கட்டாய மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது என்றும் இந்தியா கடுமை காட்டியுள்ளது. இத்துடன், பாகிஸ்தான் அதீத ஆர்வம் காட்டும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை என்றென்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ​​“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் போராட்டங்கள் பற்றிய செய்திகளை நாங்கள் கவனித்து வருகிறோம். அப்பகுதியின் வளங்கள் மீதான பாகிஸ்தானின் சுரண்டல் கொள்கைகளால் உள்ளூர் மக்களுக்கு, அவர்களின் சொந்த வளங்கள் மீதான உரிமைகள் மற்றும் அதன் நன்மைகளை மறுக்கப்படுகின்றன" என்று அவர் கூறினார்.

நீண்ட காலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிராந்தியத்தில், அரசின் பாராமுகம் மற்றும் புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் தீவிர பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். கோதுமை மாவின் விலை உயர்வு, உயர்த்தப்பட்ட மின் கட்டணம் மற்றும் வரிகளுக்கு எதிராக, பாதுகாப்பு படையினருக்கும் மக்களுக்கும் இடையே தீவிர மோதல் மூண்டது. இதில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு போலீஸ்காரர் மற்றும் மூன்று பொதுமக்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் புறக்கணிப்பை கண்டிப்பதோடு, தங்களது இந்திய ஆதரவு நிலைப்பாட்டையும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!

ஓடுபாதையில் விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!

கையில் கட்டுடன், கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

பெரும்பான்மை கிடைக்கலைன்னா பாஜகவின் ‘பிளான் பி’ என்ன? - அமித் ஷா அட்டகாச பதில்!

அஞ்சலி கொலையில் திடீர் திருப்பம்... ஓடும் ரயிலிலிருந்து குதித்த குற்றவாளி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE