’டெட்ரிஸ்’ என்ற வீடியோ கேம் விளையாட்டில் 30 ஆண்டுகளாக முறியடிக்க முடியாமல் இருந்த சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் முறியடித்துள்ளார். அவருக்கு அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானைச் சேர்ந்த நிண்டெண்டோ நிறுவனம் ‘டெட்ரிஸ்’ என்ற பிளாக்குகளை வைத்து விளையாடும் வீடியோ கேமை அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்த காலத்தில் இருந்தே உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே இந்த விளையாட்டு பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
குறிப்பாக, 90ஸ் கிட்ஸ் இடையே இந்த விளையாட்டை விளையாடாதவர்களே இருக்க முடியாது எனும் அளவிற்கு இது பிரபலமாக இருந்தது. இருப்பினும் இதை முழுவதுமாக முடிக்க முடியாதபடி இதனை உருவாக்கியவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த 30 ஆண்டுகளில் இதுவரை ஒருவர் கூட இந்த விளையாட்டை முழுமையாக முடித்ததில்லை. ஒரே ஒரு முறை செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி ஒன்று இந்த விளையாட்டை முழுமையாக முடித்திருந்தது. ஆனால், மனிதர்கள் யாரும் இந்த விளையாட்டை முடிக்கவில்லை.
இந்நிலையில் வரலாற்று சாதனையாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 13 வயது வில்லிஸ் கிப்ஸன் என்பவர் இந்த விளையாட்டை முழுமையாக முடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
’புளூ ஸ்கட்டி’ என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு வரும் வில்லிஸ், கடந்த ஜனவரி 2-ம் தேதி யூடியூபில் வெளியிட்ட வீடியோவில், ‘ஓ மை காட்’ எனக்குறிப்பிட்டு, டெட்ரிஸ் விளையாட்டை முடித்துள்ளதை அறிவித்துள்ளார். இதன் மூலம் டெட்ரிஸ் விளையாட்டின் மொத்த சாதனைகளையும் அவர் முறியடித்துள்ளதாக 404 மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது.
’ரோலிங்’ என்ற செயல்முறையைப் பயன்படுத்தி ஒரு நொடிக்கு 20 முறை பிளாக்குகளை இடம்மாற்றுவதோடு, அதன் வடிவங்களையும் மாற்றும் முறை கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதே முறையை; பயன்படுத்தி தற்போது வில்லிஸ் இந்த சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது?! போலீஸார் குவிந்ததால் பதற்றம்!
அயோத்தி ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்: மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!
உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை!