டோக்கியோவில் பயணிகள் விமானம் தரையிறங்கியபோது, கடலோர காவல் படை விமானம் மீது மோதியது. இரு விமானங்களிலும் தீப்பிடித்த நிலையில் கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனெடா விமான நிலையத்தில் நேற்று பயணிகள் விமானம் 'ஜேஏஎல்-516’ தரையிறங்கியது. அப்போது, ஓடுபாதையில், ஜப்பானிய கடலோர காவல்படை விமானம் மீது பயணிகள் விமானம் மோதியது. இதில் இரு விமானங்களிலும் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த விமான ஓட்டிகள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை, ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக கடலோர காவல்படை விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போது ஜப்பானின் ஹொக்கைடோவிலிருந்து டோக்கியோவுக்கு 367 பயணிகள், 12 விமான ஊழியர்களுடன் வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் 'ஜேஏஎல் 516’ விமானம், ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த, சிறிய ரக கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியது. இதில் இரு விமானங்களுமே தீப்பிடித்து எரிந்தன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து ஜப்பானிய போக்குவரத்து அமைச்சர் டெட்சுவோ சைட்டோ கூறுகையில், “ 'ஜேஏஎல்-516’ பயணிகள் விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனால், கடலோர காவல்படை விமானத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 5 விமான ஓட்டிகள் உயிரிழந்துவிட்டனர்.
விமானத்தின் கேப்டன் பலத்த தீக்காயத்துடன் உயிர்தப்பினார். இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பதை கூறும் நிலையில் நாங்கள் தற்போது இல்லை” என்றார்.
ஜப்பானில் நிலநடுக்கத்தால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது, விமான விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்நாட்டினர் மட்டுமின்றி அனைத்து நாட்டினரையுமே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.3000 வழங்க வேண்டும் - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!
கார் மோதியதில் கால்கள் துண்டான தந்தை... உடல் நசுங்கி 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!
கோடிகளைக் கொட்டி பிரம்மாண்ட பங்களா... பாலிவுட்டை கலக்கும் வில்லன் நடிகர்!
வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஜப்பான்... உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!