சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

By காமதேனு

சவுதி அரேபியாவின் மன்னர் பின் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் மன்னராக பதவியேற்ற சல்மான் பின் அஜீஸ், இளவரசர் முகமது பில் சல்மானை பட்டத்து இளவசராக அறிவித்தார். இதனையடுத்து முகமது பில் சல்மான அரசு விவகாரங்களை கவனித்து வருகிறார்.

பின் அப்துல் அஜீஸ்

இந்த நிலையில் சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ்(88) திடீர் உடல்நலக்குறைவால் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெட்டாவில் உள்ள கிங் பைசல் மருத்துவமனையில் மன்னர், மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு மீடியாவும் அந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் வழக்கமான பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையை விட்டு இன்று வெளியேறினார் என்ற தகவல் அந்நாட்டு தொலைக்காட்சிகள் வாயிலாக வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டில் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ், பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த மார்ச் மாதத்தில் அவரது இதயம் தொடர்பான சிகிச்சையும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE