அடி மேல் அடி...மேலும் ஒரு மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் போட்டியிட தடை!

By காமதேனு

கடந்த 2021-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு மைனே மாகாணத்திலும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (77). இவர் குடியரசு கட்சி சார்பில் கடந்த 2017 முதல் 2021 வரை அதிபர் பதவியில் இருந்தார். கடந்த 2021ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

இதனால் டிரம்ப் ஆதரவாளர்கள் அந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அன்று வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்துக்குள் (கேபிடல்) நுழைந்து போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் 2024-ல் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட முயற்சித்து வருகிறார்.

இதற்கிடையே, 2021 ஜனவரி 6-ல் நடந்த கேபிடல் வன்முறை வழக்கை விசாரித்த கொலராடோ மாகாண நீதிமன்றம், அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என்றும், அவரது பெயரைத் தேர்தல் வாக்குச்சீட்டில் குடியரசு கட்சி சேர்க்கக் கூடாது என்றும் கடந்த 19-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் டிரம்ப் தரப்பு அதிர்ச்சி அடைந்தது. மேலும், டிரம்ப்க்கு தடை விதித்த நீதிபதிகளுக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அங்கு நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்ச்சைகளுக்கு பெயர்போன டிரம்ப், எப்படியாவது மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என துடித்து வருகிறார்.

இதற்கிடையே, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் மைனே மாகாண வாக்குப்பதிவில் இருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மாகாண உயர்நிலை தேர்தல் அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.

2021 ஜனவரி 6 கேபிடல் மீதான தாக்குதல் சம்பவத்தின் பேரில், டிரம்ப்க்கு கொலராடோவைத் தொடர்ந்து, இரண்டாவது மாகாணமாக மைனேவிலும் தடை ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்த குவிந்த தொண்டர்கள்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

'கேப்டன்' பெயர் விஜயகாந்திற்குப் பொருத்தமானது... நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்... தங்கம் விலை குறைந்தது!

செல்போனை கேட்டதால் விபரீதம்... கணவன் கண்ணில் கத்திரிக்கோலால் குத்திய மனைவி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE