பயணத்தை மாற்றியமையுங்கள்... துபாய் விமான நிலையத்துக்கு வரும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

By காமதேனு

வரலாறு காணாத கனமழை, வெள்ளம் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் அல்லது அதன் வழியாகச் செல்லும் இந்தியப் பயணிகள், தங்களின் அத்தியாவசியமற்ற பயணத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

துபாய், யுஏஇ, ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்த வாரம் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை சந்தித்துள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து அந்த நாடுகள் மீண்டு வரும் நிலையில், இன்று யுஏஇ நாட்டிலுள்ள இந்திய தூதரகம் முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

துபாய் விமான நிலையம்

இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்த வார தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு உள்வரும் விமானங்களின் எண்ணிக்கை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் 24 மணி நேரமும் பணிபுரிந்து வரும் நிலையில், விமான நிலைய அதிகாரிகள், விமானம் புறப்படும் தேதி மற்றும் நேரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடமிருந்து இறுதியாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணிகள் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிக்கும் அல்லது அதன் வழியாக செல்லும் உள்வரும் இந்திய பயணிகள், பாதிப்புகள் சீரடைந்து இயல்பு நிலைக்கு வரும் வரை அத்தியாவசியமற்ற பயணத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சர்வதேச பயணத்திற்கான உலகின் பரபரப்பான துபாய் சர்வதேச விமான நிலையம், 24 மணி நேரத்திற்குள் வழக்கமான அட்டவணைக்கு திரும்பும் என்று நம்புகிறது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்திய குடிமக்களுக்கு உதவ, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஏப்ரல் 17 முதல் அவசர உதவி எண்களை இயக்கிவருகிறது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE