அதிகநாள் இருந்து திரைப்படத்துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்ய வேண்டிய ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டோம் என நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகரும். தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மறைவிற்கு, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழில்துறையினர் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரது நீண்ட நாள் நண்பரான நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன், தற்போது அமெரிக்காவில் இருந்து இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
நெப்போலியன் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், “ தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் , நமது அன்பு அண்ணன் விஜயகாந்த் அவர்கள் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சியுற்றோம். மிகவும் வேதனையும், வருத்தமும் அடைந்தோம். அன்பு சகோதரி குஷ்பு, தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா எனக்குத் தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்.
இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகமே கண்ணீரில் மூழ்கியது... நடிகர் விஜயகாந்த் திடீர் மரணம்... கதறும் தொண்டர்கள்!
விஜயகாந்த உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
ஒரே நேரத்தில் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை: சென்னையில் பரபரப்பு!
மீண்டும் தென்மாவட்டங்களில் கனமழை: அச்சமூட்டும் வானிலை முன்னறிவிப்பு!
டெஸ்லா நிறுவனத்தில் அதிர்ச்சி! ரோபோ தாக்கி உயிர் தப்பிய ஊழியர்