மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

By காமதேனு

உலகம் முழுவதும் மின்சார கார்களின் விற்பனை சரிந்ததால், 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மாற்று எரிசக்திக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை காரணமாக, மின்சார வாகனங்களின் உற்பத்தி கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக எலான் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ள நிலையில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

எலான் மஸ்க்

இது தவிர சுமார் ஐந்து முதல் ஏழு லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஓராண்டாகவே மின்சார கார்கள் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் மலிவு விலை மின்சார கார்களுக்கு மவுசு கூடி வருவதால், டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நிறுவன மறுசீரமைப்பின் அடிப்படையில் 10 சதவீதம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பணிநீக்கம்

இதன்படி உலகம் முழுவதும் சுமார் 14,000 தொழிலாளர்கள் தங்களது பணிகளை இழக்கின்றனர். உலகின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் இந்த முடிவு அந்நிறுவன தொழிலாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தொடர்ந்து வேலைநீக்கம் செய்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் டெக் ஜாம்பவான்களான மைக்ரோசாப்ட், கூகுள், எக்ஸ், அமேசான், சோனி உள்ளிட்டவை ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. அந்த வகையில் தற்போது டெஸ்லாவும் ஆட்குறைப்பு நடவடிக்கையை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE