‘இந்தியா நிலவை எட்டிவிட்டது; ஆனால் பாகிஸ்தான்...’ முன்னாள் பிரதமர் பெரும் வருத்தம்

By காமதேனு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப், சந்திரயான் சாதனையை முன்வைத்து மற்றுமொருமுறை இந்தியாவுக்கு புகழாரம் சேர்த்திருக்கிறார்.

“நமது அண்டை தேசம் நிலவை எட்டிவிட்டது; பாகிஸ்தான் இன்னமும் பூமியில் இருந்தே எழவில்லை” என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வேதனை தெரிவித்திருக்கிறார். அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக அவர் தயாராகி வருகிறார். தனது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகவும், கட்சியின் தலைவராகவும் தேர்தலை சந்திக்க இருக்கிறார்.

நவாஸ் ஷெரீப்

தேர்தலுக்குத் தயாராகும் முகமாக களப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் நவாஸ் ஷெரீப், எதிர்க்கட்சி மற்றும் ராணுவத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தாக்கி வருகிறார். முன்னதாக பாகிஸ்தானின் பிரதமராக 3 முறை பதவி வகித்த நவாஸ் ஷெரீப், ராணுவத்தின் நெருக்கடி காரணமாக பதவி இழந்த வேதனையை இப்போதும் வெளிப்படுத்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் ராணுவம் தலையிடுவதற்கு எதிராக செல்லும் இடமெல்லாம் குரல் கொடுத்து வருகிறார்.

உள்நாட்டு எதிரிகளை தாக்குவதோடு நவாஸ் நிறுத்தவில்லை. அண்டை தேசமான இந்தியா இதுவரை எதிரியாக பாவிக்கப்பட்ட நிலையில், தற்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவை பாராட்டி வருகிறார். இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒப்பிட்டும், முந்தைய ஆட்சியாளர்களை தாக்கி வருகிறார். குறிப்பாக இந்திய ஆட்சியாளர்களின் பாணியில் வளர்ச்சி என்ற முழக்கத்தை கையில் எடுத்திருக்கிறார். பாகிஸ்தானின் பல்துறை வளர்ச்சி அதில் பெண்களின் பங்கு குறித்தெல்லாம் நாட்டு மக்கள் உருகும் அளவுக்கு பேசி வருகிறார்.

மகள் மரியம், சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் உடன் நவாஸ் ஷெரீப்...

அந்த வகையில் கட்சியினர் மத்தியில் நேற்று பேசிய நவாஸ் ஷெரீப், “நமது அண்டை நாட்டினர் சந்திரனை அடைந்துவிட்டனர்; ஆனால் நாம் இன்னும் தரையில் இருந்தே எழவில்லை. நமது வீழ்ச்சிக்கு நாமே காரணம், இல்லையெனில் இந்த நாடு வேறு இடத்தை அடைந்திருக்கும். இது இப்படியே தொடரக் கூடாது" என்று முழங்கினார்.

இதையும் வாசிக்கலாமே...

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி | நாளை முதல் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!

நீதிமன்றத்தில் கதறியழுத பொன்முடி மனைவி!

கிறிஸ்துமஸ் 2023 | ஜொலிஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!

நெகிழ்ச்சி... ஏலத்துக்கு வந்த பள்ளி மாணவனின் வீடு... மீட்டுக் கொடுத்த சக நண்பர்கள், ஆசிரியர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE