பதற்றம்... கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை!

By காமதேனு

கனடா நாட்டில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுக்தூல் சிங் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். அவர், 2017-ம் ஆண்டு கனடாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி பெயர் சுக்தூல் சிங் எனத் தகவல் கிடைத்துள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையால் இந்தியா- கனடா இடையே சிக்கல் நீடித்து வருகிறது. பஞ்சாப்பை சேர்ந்த சில தீவிரவாதிகள் கனடாவுக்கு தப்பிச்சென்று சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.

காலிஸ்தான்

சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி 2017ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் கனடா சென்றுள்ளார். கனடாவில் ஏற்கெனவே நிஜ்ஜார் என்ற காலிஸ்தான் தீவிரவாதி ஜூன் 19-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் இந்தியாவின் பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். கனடா பிரதமர் குற்றச்சாட்டால் இரு நாடுகள் இடையேயான நட்புறவில் சிக்கல் இருந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE