2024-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று உருவாக உள்ளது. சுமார் 4 மணி நேரம் 9 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவை ஏற்படுகின்றன. பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இன்று தோன்ற உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இன்று இரவு 9:21 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 2:22 மணி வரையிலும் இந்த சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.
இந்த சூரிய கிரகணம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் முழுமையாக காணப்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் வானில் இருள் சூழும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு இதே போன்ற முழுமையான சூரிய கிரகணம் தோன்றியது. இதன் பின்னர் வருகிற 2150-ம் ஆண்டு தான் இத்தகைய முழு சூரிய கிரகணம் தோன்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை காண முடியாது. இருப்பினும் பொதுவாகவே சூரிய கிரகணம் அன்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்பதால் இன்றைய தினம் வெளியே செல்பவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கோடைக்காலம் என்பதால், கூடுதலாக தண்ணீர் அருந்துவது மிகுந்த பயன் தரும். இந்தியாவை பொறுத்த வரை வருகிற 2031ம் ஆண்டு வரை இதுபோன்ற முழுமையான சூரிய கிரகணம் ஏற்பட வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகண காலத்தில் உணவருந்துவது, முடி, நகங்களை வெட்டக்கூடாது என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆனால், விஞ்ஞான அடிப்படையில் இது போன்ற கட்டுப்பாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.