வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டரில் மீட்பு!

By காமதேனு

அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே ரோஸ்பர்க் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த 5 பேரை அந்நாட்டு கடற்படையினர் மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டன் நகரின் அருகே ரோஸ்பர்க் பகுதியில் வெள்ளம்

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாஷிங்டன் நகரின் அருகே ரோஸ்பர்க் பகுதியில் 5 பேர் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் 4 அடி உயர மழை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களை மீட்க ஹெலிகாப்டர் உதவி வேண்டும் எனவும் கூறி, கேத்லமெண்ட் தீயணைப்பு துறையினர் சார்பில், அந்நாட்டு கடற்படைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து கடற்படை வீரர்கள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் சென்று, அங்கு வெள்ளத்தில் மூழ்கிய டிராக்டரின் மேற்பகுதியில் நின்றுகொண்டு சிக்கித் தவித்த 5 பேரை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் அவர்களை அஸ்டோரியா கடற்படை தளத்துக்கு கொண்டு வந்து முதலுதவி மருத்துவ சிகிச்சைகள் அளித்தனர். தற்போது மீட்கப்பட்ட அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை அந்நாட்டு கடற்படையினர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளத்தில் தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்... மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! டிசம்பர் 20 கடைசி நாள்!

துணை நடிகை தற்கொலை; புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் கைது!

தொழில்நுட்ப கோளாறால் விமான நிலையத்தில் 15 மணி நேரம் தவித்த பயணிகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE