ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் நேபாள வீரர்கள்... நாடு திரும்ப வலியுறுத்தல்!

By காமதேனு

ரஷ்ய படையில் பணியாற்றிய நேபாளத்தைச் சேர்ந்த 6 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தங்கள் நாட்டு படைவீரர்களை ரஷிய ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும், ஏற்கெனவே பணியாற்றி வரும் நேபாளிகள் அனைவரையும் திருப்பி அனுப்புமாறும் நேபாளம் வலியுறுத்தியுள்ளது.

உக்ரைனுடனான போரில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 6 நேபாளிகள் உயிரிழப்பு.

'கூர்கா' என அழைக்கப்படும் நேபாள படைவீரர்கள் தங்களின் வீரம் மற்றும் போர் திறத்துக்குப் பெயர் பெற்றவர்கள். கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவப் படையில் நேபாளம் படைவீரர்கள் பணிபுரிய மூன்று நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

இமாச்சல் மலைச்சாரலில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள சிறிய நாடான நேபாளம், ரஷிய ராணுவப் படையில் தங்கள் வீரர்கள் பணிபுரிய ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. ரஷ்யாவானது கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் அருகில் உள்ள உக்ரைன் நாட்டுடன் போரில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 6 நேபாள வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ரஷ்யா ராணுவப் படையில் சேர்ந்து உயிரிழந்த 6 நேபாள் வீரர்களின் உடலை உடனடியாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறும் ரஷ்ய அரசை நேபாளம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நேபாள் அரசு

மேலும், ரஷ்ய ராணுவத்துக்கு பணியாற்றி உக்ரைனில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. போர் நடக்கும் எந்த நாட்டின் ராணுவத்திலும் இணைய வேண்டாம் என நேபாள் குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய படையில் 150 முதல் 200 நேபாளிகள் பணியாற்றுவதாக அந்நாட்டில் உள்ள நேபாள தூதர் மிலான் ராஜ் துலதர் கூறியுள்ளதாக 'காத்மாண்டு போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய படையில் உள்ள நேபாளிகள் திரும்ப அழைக்கப்படும் விவகாரம் குறித்து, நேபாளத்தில் உள்ள ரஷ்ய தூதரகம் உடனடியாக பதில் தெரிவிக்க மறுத்துவிட்டது.

தென்கொரியா, மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நேபாளிகள் ஏராளமானோர் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தளங்களில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


மிக்ஜாம் புயல்... நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி!

சென்னையில் முடங்கும் போக்குவரத்து...புறநகர் ரயில்கள் முற்றிலும் ரத்து!

புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல்.. 7 போ் உயிரிழப்பு: வெள்ளத்தில் இருந்து 10 ஆயிரம் போ் மீட்பு!

நிரம்பி வழியும் ஏரிகள்... கொசஸ்தலை, அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

மிக்ஜாம் புயல்... ஆந்திராவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE