ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கொரிய வீராங்கனையிடம் பி.வி.சிந்து தோல்வியுற்றார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிற்து. 1,000 தரவரிசை புள்ளிகள் கொண்ட இந்த போட்டியில் உலகில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜெர்மனியின் யுவான் லீயை எதிர்கொண்டார். முதல் செட்டில் பி.வி.சிந்து 21.10 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார். அப்போது காயம் காரணமாக லீ ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால், சிந்து வெற்றிப்பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்றைய இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தென் கொரியா விராங்கணை அன் சே யங் உடன் போட்டியிட்டார். அதில், 21-19, 21-11 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து போராடி தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அன் செ யங் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பை வென்றவராவார்.
இதையும் வாசிக்கலாமே...
அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்... அலர்ட்டான ரஜினிகாந்த்!
பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைசூர் மகாராஜா!
அமைதியாக இருப்பது பலவீனம் இல்லை... நடிகை வரலட்சுமி ஆவேசம்!
புடவை கட்டி பீர் பாட்டிலை தலையில் வைத்து குத்தாட்டம் போட்ட மூதாட்டி... வைரலாகும் வீடியோ!
கோபி மஞ்சூரியனை தடைசெய்ய முடியாது... காரணம் சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்!