பாகிஸ்தான் தேசம் தனது வழக்கமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்களுடன், புதிதாக தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், 33வது பிரதமரை நாளை தேர்வு செய்கிறது. பிஎம்எல்-என் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷெபாஸ் ஷெரீப், மீண்டும் ஒரு கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்த இருக்கிறார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவற்றின் கூட்டுத் தேர்வாக பிரதமர் நாற்காலியில் அமரவிருக்கும் ஷெபாஸ், அதற்கான வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளார். 72 வயதாகும் ஷெபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமரும் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஆவார்.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேசிய சட்டமன்றத்தில் நாளை(மார்ச் 3) வாக்குப்பதிவு நடைபெறும். வெற்றி பெற்ற வேட்பாளராக மார்ச் 4 அன்று, ஜனாதிபதி மாளிகையான ஐவான்-இ-சத்ரில் ஷெபாஸ் ஷெரீப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.
பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது, வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தியதாக ஷெபாஸ் ஒரு திறமையான நிர்வாகியாக அறியப்பட்டார். ஆனால், 2022-ல் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது, இங்கிலாந்திலிருந்து ஆட்டுவிக்கும் அண்ணன் நவாஸ் ஷெரீப்பின் பொம்மையாக மாறிப்போனார். சுயமாக முடிவெடுக்கத் தவறியதில், பலவீனமான பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் சவால்களை அவர் தொடர்ந்து எதிர்கொள்கிறார்.
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின், ஆவேச நிர்வாகிகளையும் பாகிஸ்தான் நெடுக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அடுக்கடுக்கான வழக்குகளை சுமத்தி சிறையில் அடைத்ததோடு, சின்னத்தை முடக்கி, கட்சியை தடை செய்து, இம்ரானின் பொதுவாழ்க்கைக்கும் தடை காணச் செய்தார்கள். ஆனபோதும் அவரது பிடிஐ கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றனர். ஆனால் அவர்கள் ஒரு கட்சியின் போர்வையில் திரள முடியாததில், நவாஸ் ஷெரீப்பின் கட்சி, சர்தாரியின் பிபிபி கட்சியின் அனுசரணையோடு ஆட்சியை பிடிக்கிறது.
பிப்ரவரி 8 வாக்கெடுப்பில், ஷெரீஃப் தலைமையிலான கட்சி தெளிவான பெரும்பான்மையைப் பெறத் தவறினாலும், மொத்தமுள்ள 265 இடங்களில் 75 இடங்களைப் பெற்று பாகிஸ்தானின் மைனாரிட்டி ஆட்சியை அமைக்கிறது. பிரதமராக அண்ணன் நவாஸ் ஷெரீப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், எப்போது வேண்டுமானாலும் ஆட்சிக்கு இடையூறு எழும் ஆபத்து தொடர்வதாலும், தம்பி ஷெபாஸ் ஷெரீப்பின் பழகி பாதையிலான ஆட்சி நிர்வாகத்துக்கும் வழிவிட்டு அவர் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!
வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!
பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!
தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!
போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?