2024ல் அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது... பிரபல ஜோதிடரின் பகீர் எச்சரிக்கை!

By காமதேனு

எதிர்வரும் 2024 ம் ஆண்டு அமெரிக்காவில் பேரழிவு ஏற்படும் என்றும், அதனால் அந்நாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்தவர் பிரபல எதிர்கால கணிப்பாளர் கிரெக் ஹாமில்டன் பார்க்கர். இவர் பிரிட்டனின் நாஸ்ட்ராடாமஸ் என போற்றப்படுகிறார். இவர் 2024ம் ஆண்டில் உலகின் பெரிய நாடு ஒன்று பேராபத்தை சந்திக்கப் போவதாக கணித்துள்ளார். உலகின் அறியப்படும் நகரம் ஒன்றில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவை குறிப்பிட்ட அவர், அந்த நாடு தனது அதிகாரத்தை மெல்ல இழக்கும் எனவும், மேலும், அமெரிக்காவில் மின்சாரம் பாதிக்கப்பட்டு, மொத்தமாக சில பகுதிகளில் மின் தடை ஏற்படுவதற்காக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிரெக் ஹாமில்டன் பார்க்கர்

பெரும்பாலும் கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் தெரிவதாகவும், உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படும் சூழல் அமெரிக்காவில் ஏற்பட இருப்பதாகவும், அது இயற்கை பேரிடராக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2024ல் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று அமெரிக்காவை உலுக்கும் எனவும் எச்சரித்துள்ளார். இவரது கணிப்புகள் பெரும்பாலும் சரியானதாகவே இருப்பதால் அமெரிக்காவில் இது பற்றிய கவலைகள் எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE