பூமியை நோக்கி வரும் அபாயகரமான கோள்... என்ன நடக்குமோ என திகைக்கும் விஞ்ஞானிகள்!

By காமதேனு

இதுவரை இல்லாத அளவுக்கு பூமிக்கு நெருக்கமாக சிறுகோள் ஒன்று வந்து கொண்டிருப்பதால் அது குறித்த தகவல்களையும், விளைவுகளையும் நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

நாசாவின் OSIRIS-REX விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, 1999-ல் முதன்முதலில் பூமியை நோக்கி வரும் அந்த சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்டது. பென்னு என்று பயிரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள், நமது கிரகத்தின் சுற்றுப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதன் செயல்பாடுகளை வைத்து ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் செப்டம்பர் 24, 2182-ல் அது பூமியைத் தாக்கக்கூடும் அல்லது நெருக்கமாக கடந்து செல்லும் என்று கணித்துள்ளனர்.

இந்த பென்னு என்ற சிறுகோள் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட உயரமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அது நமது கிரகத்தை தாக்கினால் 1,200 மெகா டன் ஆற்றலை அது வெளியிடலாம். அதாவது இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மிக சக்திவாய்ந்த அணு ஆயுதத்தை விட 24 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

பறக்கும்போது, ​ ஈர்ப்பு விசைத் துளை வழியாகச் செல்வதற்கான மிகச் சிறிய வாய்ப்புள்ளது என்றும், இது 22-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூமியைத் தாக்க அமைக்கப்படும் பாதையாக இருக்கலாம் என்றும் என்று நாசா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பென்னு, பூமி மீது மோதுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக நாசா மதிப்பிட்டாலும், பூமியில் இருந்து சுமார் 4.65 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து அருகில் வரக்கூடிய 'அபாயகரமான சிறுகோள்' என இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. பூமிக்கு வெகு அருகில் அதாவது சுமார் 32 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இது கடந்து செல்லவே அதிக வாய்ப்பு என்று நாசா கணித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE