ரஷ்யா சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி திடீர் மரணமடைந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தண்டிக்கப்பட வேண்டும் என்று என்று நவல்னியின் மனைவி யூலியா நவல்யானா வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி(47), அந்நாட்டு அதிபர் புதினுக்கு எதிராக பல்வேறு ஊழல் புகார்களைக் கூறி வந்தார். இந்த நிலையில் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்ய அரசு கைது செய்தது.
இதையடுத்து எமலோ நெனெட்ஸ் பிராந்தியத்தில் உள்ள சிறையில் அலெக்ஸி நவல்னி அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிறையில் நேற்று திடீரென மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நவல்னி இறப்பு குறித்து ரஷ்ய சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிக்கையில், “நடைபயிற்சியில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்து உடனடியாக உயிரிழந்தார்” என்று தெரிவித்துள்ளது. மாஸ்கோவிற்கு வடகிழக்கே சுமார் 1,900 கிமீ தொலைவில் உள்ள யமலோ-நெனெட்ஸ் சிறைச்சாலையில் இருந்த அலெக்ஸி நவல்னி மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இறந்ததாக அறிவிக்கப்பட்ட நேற்று, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் அவரது மனைவி யூலியா நவல்யானா கலந்து கொண்டார்.
அப்போது அவர், " ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், கிரெம்ளின் மாளிகையில் உள்ள அவரது கூட்டாளிகளும் எனது குடும்பத்திற்கும், நாட்டிற்கும் எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் நம் நாட்டில் அவர்கள் செய்த அனைத்து அட்டூழியங்களுக்கும் இந்த ஆட்சியும், புதினும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!
மிஸ் பண்ணிடாதீங்க... இன்று 17 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... ஐசிசி விதியால் சிக்கலில் இந்திய அணி!
அதிர்ச்சி வீடியோ... யானையை காரில் துரத்திய அதிமுக பிரமுகர்: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!
அதிமுக ஆட்சியில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை - எஸ்.பி.வேலுமணி உறுதி!