இறந்தும் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல்... பாப் இசை மன்னன் முதலிடம்!

By காமதேனு

2023-ம் ஆண்டின் ’மறைவுக்குப் பின்னரும் வருமானம் குவிக்கும் பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில்’ பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேசப் பிரபலங்கள் பலரும் தங்கள் படைப்புகள் மூலம், மறைவுக்குப் பின்னரும் அதிக வருமானம் குவித்து வருகின்றனர். அப்படியானவர்களை ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டு வருகிறது. நடப்பாண்டின் பட்டியல் இந்த வாரம் வெளியானது. இந்தப் பட்டியலில் பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை என்றும் ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

மைக்கேல் ஜாக்சன்

115 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்துடன் மைக்கேல் ஜாக்சன், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். அக்டோபர் 1, 2022 மற்றும் செப்டம்பர் 30, 2023-க்கு இடையில் இறந்த பிரபலங்களின் படைப்புகள் விற்பனை, உரிம ஒப்பந்தங்கள், ஸ்ட்ரீம் செய்யப்பட்டவை மற்றும் பிற வருமான ஆதாரங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டனர்.

மைக்கேல் ஜாக்சனுக்கு அடுத்தபடியாக இந்தப் பட்டியலில், 100 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்துடன் அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான எல்விஸ் பிரெஸ்லி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் ஒருவகையில் மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மாமனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் ஜாக்சன்

இந்த பட்டியலில் இவர்களுக்கு அடுத்த இடங்களில், அமெரிக்க கீபோர்டு கலைஞர் ரே மன்சரெக், அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் டாக்டர் சியூஸ், அமெரிக்க கார்ட்டூனிஸ்ட், சார்லஸ் எம். ஷூல்ஸ், அமெரிக்க பாடகர் பிரின்ஸ், அமெரிக்க பாடகர் விட்னி ஹூஸ்டன், பிரிட்டிஷ் பாடகர் ஜான் லெனான், ஜமைக்கா பாடகர் பாப் மார்லி ஆகியோர் வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

2023 கிரிக்கெட் : சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள்... டாப் லிஸ்ட்டில் 3 இந்தியர்கள்!

நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!

கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!

மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!

அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE