பாகிஸ்தான் தேர்தல் முடிவு: பிஎம்எல்-என், பிபிபி கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை

By காமதேனு

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என், பிலாவல் பூட்டோவின் பிபிபி கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அன்று மாலை முதலே வாக்குப்பதிவு தொடங்கியிருந்தாலும், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிவடையும் தருவாயில் உள்ளது. இருப்பினும் இதுவரை எந்தத் தெளிவான வெற்றி முடிவுகளும் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் கால அளவை விட தற்போது தாமதம் ஏற்பட்டு வருவதால், வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் மோசடி நடப்பதாகவும் அந்நாட்டு மக்களிடையே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இம்ரான் கான்

மொத்தம் 266 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அந்நாட்டு தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இதுவரை 250 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 99 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளனர்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) 71 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 53 இடங்களிலும், முத்தாஹிதா குவாமி இயக்கம் 17 இடங்களையும், பிற இடங்களில் சிறிய கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாவஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ

இதற்கிடையே முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும் பிபிபி கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோரை, பிஎம்எல்-என் சார்பில் நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்து பேசியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பிஎம்எல்-என், பிபிபி இணைந்து மத்தியிலும், பஞ்சாப் மாகாணத்திலும் கூட்டணி அரசை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆட்சி அமைக்க 133 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சியும் கூட்டணி அரசை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் பாகிஸ்தானில் எந்த கூட்டணி ஆட்சி அமையும் என அந்நாடு மட்டுமின்றி உலக நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE