ஸ்பெயின் நாட்டின் வருங்கால ராணியாக முடிசூட உள்ள இளவரசி லியோனார், 18 வயது பூர்த்தியானதை அடுத்து அதிகாரபூர்வமாக பட்டத்து இளவரசியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் முடியாட்சி குடியரசு அமலில் இருந்து வருகிறது. இங்கு மக்கள் தேர்வு செய்யும் அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், மன்னர் குடும்பத்திற்கு பாரம்பரிய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நாட்டின் அரசராக 6வது பிலிப்பி இருந்து வருகிறார். ராணியாக லெட்டிசியா உள்ளார். இவர்களுக்கு கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இளவரசி லியோனார் பிறந்தார். இவரது முழு பெயர் லியோனார் டி தோடாஸ் லாஸ் சாண்டோஸ் டி போர்பான் ஒய் ஆர்ட்டிஸ் என்பதாகும். அந்நாட்டு மன்னர் குடும்ப முறைப்படி 18 வயது பூர்த்தி ஆகும் போது இளவரசன் அல்லது இளவரசி நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி பொறுப்பேற்றுக்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் தனது 18வது வயதை பூர்த்தி செய்த இளவரசி லியோனார் அதிகாரபூர்வமாக இளவரசியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் வருங்கால ராணியாக பொறுப்பேற்க உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்காக ராணுவ பயிற்சி மேற்கொண்டு வந்த லியோனார் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பட்டத்து இளவரசியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவரது தந்தை 6வது பிலிப்பி கடந்த 37 ஆண்டுகளாக மன்னராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. புதிய பட்டத்து இளவரசியாக லியோனார் பொறுப்பேற்று கொண்டுள்ளதை அடுத்து, ஸ்பெயின் நாட்டில் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!
அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!
பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ
டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!