இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரம்... உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை!

By காமதேனு

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 90.44 டாலராக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதலை தொடங்கினர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவிப்பை வெளியிட்டு தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே போர் தொடர்ந்து 24-வது நாளாக நீடித்து வருகிறது.

இஸ்ரேல் தாக்குதல்

இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 90.44 டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு

நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!

சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE