சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மறைவு... கருப்பு வெள்ளைக்கு மாறிய அரசு இணையதளங்கள்!

By காமதேனு

சீனாவின் முன்னாள் பிரதமர் லி கெகியாங் திடீரென மாரடைப்பால் நள்ளிரவில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் கெகியாங். இவர் கடந்த 2013 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக இருந்தார்.

சீன அதிபர் ஜி ஜிங்பின்னின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக கெகியாங் இருந்தார். பொருளாதார சீர்திருத்தங்களை ஆர்வத்துடன் மேற்கொண்ட கெகியாங், சீன நாட்டின் வருங்கால தலைவராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிபர் ஜிங்பிங்குடன், லி கெகியாங்

ஆனால், ஜி ஜிங்பிங் வளர்ச்சி காரணமாக அவர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர், அவரது தலைமையின் கீழ் 10 ஆண்டுகள் கெகியாங் பிரதமராக பணியாற்றினார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவியில் இருந்து விலகிய கெகியாங், ஷாங்காய் நகரில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 68 வயதான கெகியாங்கின் இறுதிச் சடங்கு நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சீனாவின் அரசு இணையதளங்கள் அனைத்தும், அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக கருப்பு வெள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளன.

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE