‘உங்களின் வரலாற்று தலைமைக்கு நன்றி...’: ஜோ பைடனை பாராட்டிய கமலா ஹாரிஸ்

By KU BUREAU

வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சிகாகோவில் நடந்த ஜனநாயக தேசிய மாநாட்டின் முதல் நாளில் உங்களின் வரலாற்று தலைமைக்கு நன்றி...’ என்று ஜனாதிபதி ஜோ பைடனை பாராட்டினார்.

திங்கள் கிழமை இரவு நடந்த ஜனநாயக தேசிய மாநாட்டில் பேசிய துணை ஜனாதிபதி கமலா, "உங்களுடைய வரலாற்று தலைமைக்கு, எங்களின் தேசத்துக்கான வாழ்நாள் சேவைக்கும் மற்றும் நீங்கள் செய்யப்போகும் அனைத்துக்கும் நன்றி. நாங்கள் என்றென்றும் உங்களுக்கு நன்றியுடன் இருப்போம்.

நமது ஆகச்சிறந்த ஜனாதிபதி பைடனைக் கொண்டாடுவதன் மூலம் நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன். நாம் விரும்பும் லட்சியங்களுக்காக நாம் போராடுவோம். போராடினால் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதை நினைவில் கொள்ளுவோம்" என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருக்கும் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஜனநாயக தேசிய மாநாட்டில் அவர் உரையாற்ற உள்ளார். அவர் கமலாவை தேர்ந்தெடுக்க வேண்டியும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்தும் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பிரதான கட்சிகளில் ஒன்றினை வழிநடத்தும் முதல் கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து கட்சியின் ஒற்றுமையை நிரூபிக்கும் வகையில், இந்த மாதத்தில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

நவம்பர் தேர்தலை நோக்கிய பிரச்சராம் தீவிரமடைந்துள்ள நிலையில், கமலா ஹாரிஸ் தேசத்தின் கூட்டு பலத்தின் மீது நம்பிக்கை தெரிவித்து வருகிறார். அவர் அனைவரும் "ஒன்று கூடி, ஒரு மக்களாக ஒருமித்தக் குரலில் அறிவிப்போம்: நாங்கள் முன்னேறுகிறோம்" என்று தெரிவித்தார். கமலா ஹாரிஸ் தனது ஏற்புரையை வியாழக்கிழமை நிகழ்த்த உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE