அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் சிறிய ரக விமானங்களை சொந்தமாக பயன்படுத்தி வருகின்றனர். விமானி பயிற்சி பெற்ற நபர்கள் மட்டுமே இத்தகைய விமானங்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் அவ்வப்போது விபத்துகள் நேர்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஃப்ளோரிடா மாகாணத்தின் ட்ரெய்லர் பார்க் பகுதியில் இருந்து ஒற்றை எஞ்சின் கொண்ட பீச் கிராஃப்ட் பொனன்சா வி 35 ரக விமானம் ஒன்று, அந்நாட்டு நேரப்படி இரவு 7.15 (இந்திய நேரப்படி இன்று காலை 9 மணி) குடியிருப்பு பகுதிகளின் மீது பறந்து கொண்டிருந்தது.
அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளின் மீது விழுந்து நொறுங்கி விபத்திற்கு உள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் உட்பட பலரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்ததால் தீ வேகமாக அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
இருப்பினும் தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகு எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அவர்களது உடல்கள் மீட்கப்படுமா என்பது போன்ற தகவல்கள் தெரியவரும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே விமானம் விழுந்ததும் தீ பற்றிய போது, பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதுவரை 10க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ள நிலையில், 3 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். முழுமையான மீட்புப்பணிகளுக்கு பிறகே உயிரிழப்புகள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார் நடிகர் விஜய்!
பேடிஎம் கணக்கில் உள்ள வாடிக்கையாளர் பணம் என்னாகும்? ரிசர்வ் வங்கி தடையை தொடர்ந்து பேடிஎம் விளக்கம்!
பிரதமரின் வருகையால் ராமேஸ்வரம் கோயிலில் எகிறிய உண்டியல் காணிக்கை - 16 நாளில் இவ்வளவா?
சோகம்... புற்றுநோயால் காலமான நடிகை பூனம் பாண்டே!
வீட்டிற்குள் விழுந்து நொறுங்கிய விமானம்... அதிர வைக்கும் வீடியோ!